ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் ஓரு ஆண்டு ஆகியும் குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-02-11 10:08 GMT

குடிநீர் குழாய்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது அத்திமலை பட்டு கிராமம். இங்கு செல்லியம்மன் நகர் பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஜல் ஜீவன் குழாய்களில் ஒரு ஆண்டு காலம் ஆகியும் குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது குறித்து பல மாதங்களாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க படவில்லை என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News