திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
போளூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.;
Update: 2024-04-29 08:34 GMT
தண்ணீர் பந்தல்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், குளிர்பானங்களை வழங்கினர். இதில் போளூர் நகர தி.மு.க.செயலாளர் கோ.தனசேகர், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் என்.நரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.