அரசுப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு

ஏகனாம்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஐந்து லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-05 13:16 GMT

ஏகனாம்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஐந்து லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா', 'கார்டியன் இந்தியா' மற்றும் 'சீ' டிரஸ்ட் சார்பில், 5 லட்சம்ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நேற்று நடந்தது. 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' நிறுவன துணை தலைவர் பிரேம் ஆனந்த், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அலகினை துவக்கி வைத்து, மாணவியர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவியருக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. விழாவில், மாவட்ட சமூக நலத்துறை பணியாளர்கள் அனிஷா, உமா மகேஸ்வரி பெண்கள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் விபு உட்பட பலர் பங்கேற்றனர்."
Tags:    

Similar News