தாளவாடியில் குடிநீர் தட்டுப்பாடு - கிராம மக்கள் அவதி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-17 06:07 GMT

டிராக்டர்களில் குடிநீர் பிடித்து பயன்படுத்தும் மக்கள்

ஈரோடு மாவட்டம், சத்தி அடுத்த தாளவாடி மலைப் பகுதியை சுற்றிலும் சுமார் 70 க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வற்றி விட்டன. இந்த வருடம் போதிய அளவு கோடை மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீர் இல்லாததால் விவசாய பணியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர் செய்துள்ள கரும்பு, வாழை, தக்காளி ,போன்ற பயிர்கள் கருகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி, திகினாரை பையணாபுரம் மல்லங்குழி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அருகில் எங்கு தண்ணீர் கிடைக்கிறதோ அங்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை காரணமாக வேலைக்கு கூட செல்ல முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இது குறிந்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது எங்களுக்கு போதுமான அளவு குடி தண்ணீர் கிடைக்காததால் தண்ணீர் காக அவதிபட்டு வருகிறோம். சிலர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி கொள்கின்றனர். எங்களால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை. உடனடியாக எங்களுக்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News