தேனியில் இன்றும், நாளையும் குடிநீர் நிறுத்தம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-03 05:14 GMT

நகராட்சி அலுவலகம் 

தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா விடுத்துள்ள செய்தி அறிக்கையானது.தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது இந்த குடிநீர் குழாய் உடைப்பை  சீராக்கும் பணி நடைபெற உள்ளதால் இன்றும் நாளையும் என இரண்டு தினங்கள் மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News