குடிநீர் கட்டணம் உயர்வு:  பொதுமக்கள் முற்றுகை

சுசீந்திரத்தில் குடிநீர் கட்டணம் உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2024-04-29 14:51 GMT

சுசீந்திரத்தில் குடிநீர் கட்டணம் உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் குடிநீர் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய நிலையில், தற்போது மாதம் ரூ.145 என உயர்த்த முயற்சி செய்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் சுசீந்திரம் பேரூர் தலைவர் கணேஷ் தலைமையில் முன்னாள் பேரூராட்சி தலைரவ் முருகேஷ், கவு்னசிலர் வள்ளி அம்மாள் மற்றும் பொதுமக்கள் சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சுசீந்திர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில்; சுசீந்திரம் பேரூராட்சி பகுதியில் தற்போது குடிநீர்கட்டணம் மாதம் ரூ.138 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென குடிநீர் கட்டணம் மேலும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி உறுப்பினர்களுக்கும் எந்த தகவலும் இல்லை. அதே நேரம் கோடைகாலத்தில் முறையாக குடிநீரும் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.    

இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் கூறுகையில்; சுசீந்திரம் பேரூராட்சியில் மாதம் ரூ.40 என இருந்த குடிநீர் கட்டணத்தை கடந்த 2018ம் ஆண்டு முதல் வேகமாக உயர்த்தி உள்ளனர். மாவட்டம் மழுவதுமே கிராம, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டணமாக தற்போது ரூ.50 தான் பெறுகின்றனர். ஆனால் சுசீந்திரம் பேரூராட்சியில் தற்போது ரூ.145 கட்டணம் பெறுவதற்கான முயற்சி நடைபெறுகிறது. கோடைகாலத்தில் அத்தியாவசிய தேவையான குடிநீர் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி வசூல் செய்வது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமோ, குடிநீர் வடிகால் வாரியத்திடமோ முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என தெரியவந்துள்ளது. குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்யவில்லை என்றால் சுசீந்திரம் பகுதி மக்கள் திரண்டு ஒரு வாரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags:    

Similar News