கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2024-03-02 10:31 GMT
கருப்பு சட்டை அணிந்து அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் எதிர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று காலை நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் அழகுமீனா மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், 2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டிப்பதாக தெரிவித்து, அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். பட்ஜெட்டில், 2024-- 2025ம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 945. 33 கோடி ரூபாயாகவும், செலவு, 905. 19 கோடி ரூபாயாகவும், பற்றாக்குறை 40. 14 கோடி ரூபாயாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து, திரையின் வாயிலாக கவுன்சிலர்களுக்கு விளக்கப்பட்டது. கூட்டம் தொடங்கியதும், பட்ஜெட் புத்தகம், இரண்டு ஸ்வீட் பாக்ஸ் கொண்ட பை, ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் 'பட்ஜெட் புத்தகத்தை, இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்திருந்தால், அதை படித்து விவாதத்தில் பங்கேற்க முடியும்' என்றார். பட்ஜெட் தொடர்பான விவாத கூட்டம், மார்ச் 5 அல்லது 6 ம் தேதிகளில் நடத்த விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News