தைப்பூச தேர் திருவிழாவில் களைகட்டாத மாட்டுச் சந்தை

காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச தேர் திருவிழாவை ஒட்டி நடக்கும் நாட்டு மாட்டு சந்தைக்கு மாடுகள் குறைவான எண்ணிக்கையில் வந்ததால் சந்தை களையிழந்து காணப்பட்டது.

Update: 2024-01-28 03:25 GMT

திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோவிலில் தைப்பூசத் தேரோட்டத்தை ஒட்டி நாட்டுமாட்டு சந்தை கூடுவது வழக்கம். பலஇடங்களில் மாட்டு சந்தைகள் கூடினாலும் காளிப்பட்டியில் மட்டும் தான்நாட்டு மாட்டுக்கு என தனி சந்தை கூடுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும்ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். சேலம் ஆத்தூர், தருமபுரி,கிருஷ்ணகிரி, உள்ளிட்ட தமிழக்த்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் இங்கு மாடுகளை வாங்கவருவார்கள்.

இந்த சந்தையில் சந்தனப் பிள்ளை, மயிலை, நாட்டுக்குட்டை, தெக்கத்தி மாடு கோரப்பட்டு செவலை,கறுக்கா மயிலை, காங்கேயம் மயிலக் காளை வகை, கராம் பசு வகை, ஆலம்பாடி, வடக்கத்தி, மற்றும் நாட்டுமாடுகள் என ஆயிரக்கணக்கான மாடுகள்,சுழியில்ராஜா சுழி என்ற வகை கொண்ட ஜல்லிகட்டில் கலந்து கொண்ட காங்கேயம்காளைகள் எடப்பாடி பகுதியை சேர்ந்த காராம் பசு வகை சந்தைக்கு வரும்.ஆனால் இந்த ஆண்டு சந்தைக்கு மாடுகள் வரத்து இல்லை. ஆனாலும் பவானி மயிலம்பாடிபகுதியில் இருந்து காங்ககேயம் காளைகள் மற்றும் பசுக்கள் விற்பனைக்குகொண்டு வரப்பட்டு காளைகளுக்கு ஜோடிக்கு ரூ ஒன்றரைலட்சமும், பசுமற்றும் கன்றுக்கு ரூ 75ஆயிரமும் விலை வைக்கப் பட்டது.

இதேபோல் நாட்டுக்குட்டை மாடும் பார்வையாளர்களை கவர்ந்தது. மாட்டின் பல்மற்றும் சுழி தரம் ஆகியவைகளை வைத்து விலை கிடைப்பதாகவும் நாட்டுமாட்டுக்கென கூடும் இந்த சந்தை தமிழக அளவில் புகழ்பெற்றது எனவும்நான்கு நாட்கள் தொடர்ந்து சந்தை நடக்கும் எனவும் மாட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.மாட்டு்சந்தையை ஒட்டி தலைகயிறு முகக்கயிறு, சாட்டை,சலங்கைகள், கழுத்து மணிகள் விற்கும் கடைகளும் இங்கு இருந்தது.

Tags:    

Similar News