குடிநீர் குழாயை சூழ்ந்த களை செடிகள் - அகற்ற கோரிக்கை
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள குடிநீர் குழாயை சுற்றி படர்ந்திருக்கும் களைச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு செயலணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பாலக்கரை மிஷின் தெருவில் ஊராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் அருகில் புல்செடிகள் வளர்ந்து, குப்பை கூளங்கள் சேர்ந்து அப்பகுதி மக்களுக்கு பயன்படாதவாறு உள்ளது.
மேலும் அவ்விடத்தில் பரங்கி கொடிகளும், வாழை மரங்களும் நடப்பட்டு தனி நபர் ஆக்கிரமித்துள்ளது போல் தெரிகிறது. மேலும் அதே வீதியில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள குடிநீர் குழாய் அருகிலும் புல் புதர்கள் முளைத்து அருகில் குப்பைகள் சேர்ந்து குப்பை மேடாக தெரிகிறது.
இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது, விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளதால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனவே அவ்விடத்தை சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் பார்வையிட்டு, போர் கால அடிப்படையில் தூய்மை பணி மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை நோயினால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கும் படி தஞ்சை மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு செயலணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்