மெமு ரயிலுக்கு திருவாரூரில் வரவேற்பு
திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்த மெமு ரயிலிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
Update: 2024-01-22 08:36 GMT
வரவேற்பு
திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்த மெமு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு திருவாரூர் ரயில் நிலைய மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழு உறுப்பினர்கள் மலர்தூவி, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில் உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கரன், நிலைய மேலாளர் ரவி முதன்மை வணிக ஆய்வாளர் உதய சுகுமாரன் காவல்துறை ஆய்வாளர் முத்துலாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.