சித்த மருத்துவ விழிப்புணர்வு ஓட்டத்துக்கு வரவேற்பு
கன்னியாகுமரியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு ஓட்டத்துக்கு வரவேற்பு;
Update: 2024-02-12 06:43 GMT
கன்னியாகுமரியில் சித்த மருத்துவ தின கொண்டாட்டத்தின் தொடர் நிகழ்வாக மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி மன்றமும், சென்னை தேசிய மத்திய நிறுவனமும் இணைந்து சித்த மருத்துவ ஆரோக்கிய விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வு கடந்த 24-01-2024 அன்று காஷ்மீரில் மத்திய சுகாதார துறை ஆயூஷ் அமைச்சகம் மற்றும் ஆயூஷ் அமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்திய முழுவதும் உள்ள 21 நகரங்கள் வழியாக கடந்து 3 ஆயிரத்து 333 கி. மீ தூரம் 20 நாட்கள் பயணித்து நேற்று 10-02-2024 அன்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தது. கன்னியாகுமரி வந்தடைந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை கன்னியாகுமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராபர்ட் சிங் அவர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தியும், சங்கு மாலை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.