கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்

Update: 2023-12-06 09:56 GMT

நல உதவி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா, உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா செயிண்ட் பேசில் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ சுண்டல், ஒரு கிலோ பாசிப்பருப்பு, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. 130 மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய உதவியாளர்கள் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய சேவை நிலைய அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஜெயராஜ் கிருஷ்ணன், தாளாளர் ஜெயசீலி கிறிஸ்டி ஆகியோர் தலைமை தாங்கி வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர். இயக்குனர்கள் பேசில் பிரைட், டேவிட் லிவிங்ஸ்டன், நீவா லில்லி எஸ்தர், ஜாய் ஆக்னிஸ், சோபியா லிவிங்ஸ்டன், வீரராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News