மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.

Update: 2024-02-13 06:13 GMT

நலத்திட்ட உதவிகள் 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், சாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர், சாலைஉள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 397 மனுக்கள் வரப்பெற்றன.

இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் பிருந்தாதேவி மனுக்களை வாங்கினார். பின்னர் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 17 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார். இதையடுத்து அவர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News