பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஸ்ரீ கிரண் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ கிரண் வழங்கினார்.;
Update: 2024-02-25 05:31 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் ஸ்ரீ கிரண்அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் மாற்று திறனாளர்களான நல வாழ்வு சங்கம் இணைந்து நடத்திய நலத்திட்டம் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஸ்ரீ கிரண் அறக்கட்டளை உடைய நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்ரீ கிரண் 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாற்றுத்திறனாளர்கள் நலவாழ் சங்கத்தின் தலைவர் ஜெயவேல் பொருளாளர் புண்ணிய கோடி, எம்.ஆர்.எப் தொழிற்சங்க பொதுச் செயலாளர் சுரேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.