மகாராஜபுரத்தில் பெண்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
By : King 24X7 News (B)
Update: 2023-11-11 06:49 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகாராஜபுரம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் 300 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வேட்டி மற்றும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது. நலத் திட்ட உதவிகளை மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து வழங்கினார். வார்டு உறுப்பினர்கள் சுயம்பு, அனீஸ்வரி, ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.