மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில் நல திட்ட உதவிகள் வழங்கல்
துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, பிறந்தநாளை முன்னிட்டு மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் நல திட்ட உதவிகள் ஒன்றிய செயலாளர்கள் வழங்கினர்
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர்கள் வழங்கினர். தி
ருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பிறந்தநாள் முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம், இனிப்பு, போர்வை, மற்றும் பல நல திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர்கள் பா.ராமஜெயம், வி.பி. அண்ணாமலை, ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, வழங்கினர். பின்பு மறுவாழ்வு இல்லத்தில் உள்ள மக்களுக்கும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும் ,கட்சி நிர்வாகிகளும், ஏழை எளிய மக்களுக்கும், இருளர் இனத்தை சேர்ந்த மக்களுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கினார்கள் .
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, கிளைச் செயலாளர் தங்கமணி, மற்றும் கழக முன்னோடிகள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.