மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - இராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்
114 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 51.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - இராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்
By : King 24x7 Website
Update: 2024-02-28 17:47 GMT
நாமக்கல்- துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஸ்குமார் விழாவில் கலந்துகொண்டு 114 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 51.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது.... நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர், திருச்செங்கோடு, மோகனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் புதிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அட்டை, உதவித்தொகை, வங்கி கடன், ஆதார் அடையாள அட்டை, காதொலிகருவிகள், தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்தினாளிகளுக்கு எனது பார்லிமெண்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடர்ந்து ஸ்கூட்டர்கள் வழங்கி வருகிறேன். அந்த வகையில் இதுவரை மொத்தம் 57 இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கியுள்ளேன். நாமக்கல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9 இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் விண்ணப்பித்தவருக்கு ஆட்சியரின் நடவடிக்கையால் இன்றே ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது என்றார். தொடர்ந்து, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், திறன்பேசிகள், செயற்கை கால், வீல் சேர், 3 சக்கர சைக்கிள், பிரெய்லி வாட்ச், எல்போ ஸ்டிக் உள்ளிட்ட ரூ. 51.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 114 மாற்றுத்திறனாளிகளுக்கு ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.