ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி
பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட வன அலுவலர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-01-29 04:59 GMT
அரியலூர் மாவட்டத்தின் சுற்றுலா தளமான கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஈரநில பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைப்பெற்றது. இந்த கணக்கெடுப்பில் சைபீரியா, மங்கோலியா, ரஷ்யா மற்றும் வட இந்தியாவில் இருந்தும் ஏராளமான பறவைகள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கபட்டது. மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக ஈரநில பறவைகள் குறித்த கணக்கெடுப்பின் விலங்கியல் துறை பேராசிரியர் ஜெரமையா தெரிவித்தாா். இதில் மாவட்ட வன அலுவலர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.