வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு

குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக பரவிய வாட்ஸ் அப் ஆடியோ வதந்தியால் கிராம மக்கள் பிடித்து வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் மீட்டனர்.

Update: 2024-02-28 06:20 GMT

வடமாநில வாலிபர் 

குமரி மாவட்டம் நீரோடி மீனவ கிராமத்தில் இரவு சுடிதார் அணிந்த பெண் மற்றும் சில ஆண்கள் சேர்ந்து இரண்டு குழந்தைகளை கடத்திச் சென்று விட்டதாகவும் பின்னர் குழந்தைகள் அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டதாகவும் பெற்றோர் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே விடாமல் அடைத்து வைத்துவிட்டு வெளியே வந்து கடத்தல் கார்களை பிடிக்க வேண்டும் என்று பங்கு தந்தை கூறியதாக இரவு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று வெளியானது.

இந்த நிலையில் இரவு குழந்தை கடத்தல்காரன் ஒருவரை நீரோடி சர்ச் அருகே பிடித்து வைத்திருப்பதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது அவர் வடமாநில வாலிபர் என்பதும் கடந்த ஆறு மாதங்களாக நீரோடி பகுதியில் சுற்றி வந்ததும் தெரிய வந்தது.மேலும் அந்த நபர் மனநோயாளி போன்று தெரிந்ததால் அவரை விசாரணைக்கு பின்னர் போலீசார் விடுவித்தனர். வாட்ஸ் அப் ஆடியோ வதந்தி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News