கொட்டும் வருமானம் - இரட்டை ரயில் பாதை திட்டத்தில் பாராமுகம்

காஞ்சிபுரம் சுற்றியுள்ள 12 ரயில் நிலையங்கள் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 124 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல, வாலாஜாபாத் கார் முனையம் அமைந்தது முதல், 279 கோடி ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும், இரட்டை ரயில் பாதை அமைக்காமல், ரயில்வே நிர்வாகம் பாராமுகமாக இருந்து வருகிறது.

Update: 2024-05-07 06:00 GMT

பைல் படம் 

தெற்கு ரயில்வேயின், சென்னை மண்டலம் கீழ் இயக்கப்படும் மின்சார ரயில்கள், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி, வேளச்சேரி அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் இயக்கப்படுகின்றன. ஆனால், மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தும் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான பகுதிகளுக்கு போதிய ரயில் சேவைகள் இருப்பதில்லை. இயக்கப்படும் மின்சார ரயில்கள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளன.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னைக்கு சென்று பணிபுரிவோர் மற்றும் சொந்த வேலை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதால், ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயும் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 56 கி.மீ., துாரத்தில், 12 ரயில் நிலையங்களின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்து கொண்டே வருகிறது. ஐந்து ஆண்டுகளில், இந்த 12 ரயில் நிலையங்கள் வாயிலாக, ரயில்வே நிர்வாகத்துக்கு கிடைத்த வருமானம் மட்டும் 124 கோடி ரூபாய் என, காஞ்சிபுரம் - சென்னை ரயில் பயணியர் சங்கத்தினர், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்ட கேள்விகளுக்கு, ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது."

Tags:    

Similar News