குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக மழை
குறிஞ்சிப்பாடி பகுதியில் மழையால் குளிர்ந்த காற்று வீசுவாதல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்;
Update: 2023-12-25 08:37 GMT
குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக மழை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மழையினால் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.