தஞ்சையில் பரவலான மழை - தயார் நிலையில் பேரிடர் கால தன்னார்வலர்கள்

Update: 2023-11-15 05:20 GMT
பேரிடர் கால தன்னார்வலர்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை இடைவெளி விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதேபோல, செவ்வாய்க்கிழமை பகலிலும் இடைவெளி விட்டு விட்டு மழை தொடர்ந்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அணைக்கரை 58.8, மஞ்சளாறு 35.6, அய்யம்பேட்டை, நெய்வாசல் தென்பாதி தலா 32, கும்பகோணம் 31, பாபநாசம் 30, தஞ்சாவூர் 26.3, மதுக்கூர் 25, திருவையாறு 23, பட்டுக்கோட்டை 22.5, திருவிடைமருதூர் 20, அதிராம்பட்டினம் 18.3, ஒரத்தநாடு, ஈச்சன்விடுதி தலா 16, பூதலூர் 14.2, திருக்காட்டுப்பள்ளி 13.4, குருங்குளம் 12, வல்லம் 11, பேராவூரணி 10, வெட்டிக்காடு 8.3, கல்லணை 6.8. இதேபோல, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): மஞ்சளாறு 40.6, அணைக்கரை 19.8, திருவிடைமருதூர் 14.5, கும்பகோணம் 14, ஒரத்தநாடு, நெய்வாசல் தென்பாதி தலா 8, அய்யம்பேட்டை 4, பாபநாசம் 3.3, மதுக்கூர் 2.8, பூதலூர், வெட்டிக்காடு தலா 2, அதிராம்பட்டினம் 1.7, திருக்காட்டுப்பள்ளி 1.6, கல்லணை 1.2, பட்டுக்கோட்டை, குருங்குளம் தலா 1. தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், ஆப்தமித்ரா என்கிற பேரிடர் கால நண்பர்கள் என்கிற திட்டத்தில் பயிற்சி பெற்ற 300 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, பேரிடர் கால மீட்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உயிர் காக்கும் கவசம், கையுறை, கத்தி, முதலுதவி பெட்டி, தலைக்கவசம் உள்பட 14 பொருள்கள் அடங்கிய அவசர கால பெட்டகம் வழங்கப்பட்டு, அந்தந்த வட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் நிகழும்போது வரும் தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்பு பணி மேற்கொள்ளும் விதமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News