குமாரபாளையத்தில் மனைவி பிரிவால் கணவன் மாயம்

குமாரபாளையத்தில் மனைவி பிரிவால் கணவன் மாயமானார்.

Update: 2024-03-26 13:46 GMT

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதியில் வசிப்பவர் கார்த்தி, (36). வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி பிரிந்து சென்று விட்டார்.

அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்த இவர் மார்ச். 21ல், காலை 11:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News