புளியங்குடி அருகே குடும்பத் தகராறில் கணவா் கொலை

தென்காசி மாவட்டம்,வேட்டரம்பட்டியில் கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-01-28 11:21 GMT
புளியங்குடி அருகே குடும்பத் தகராறில் கணவா் கொலை

தென்காசி மாவட்டம், மடத்துப்பட்டி அருகே உள்ள வேட்டரம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜு ( 55). பால் வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கும் மனைவி செல்விக்கும் (51) குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். நேற்று இரவும் பிரச்னை ஏற்பட்டதாம். இதில் செல்வி தாக்கியதில் ராஜு இறந்தாராம். இன்று காலை அவரது வீட்டிற்கு சென்ற உறவினா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சொக்கம்பட்டி போலீஸாா் சென்று ராஜுவின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தலைமறைவாகிவிட்ட செல்வியை தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News