வெள்ளிச்சந்தை அருகே மனைவி மாயம் - கணவன் புகார்

வெள்ளிச்சந்தை அருகே கடைக்கு சென்ற மனைவி காணாமல் போனது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-31 04:46 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்தவர் அருள்லிங்கம் (34). கொத்தனார். இவரது மனைவி மகேஸ்வரி (32) இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.      கடந்த சில நாட்களாக அருள் லிங்கம் நெல்லை மாவட்டம் திருவைகுண்டத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இதனால் மகேஸ்வரி ஈத்தன் காட்டில் உள்ள தனது அக்கா வீட்டில் இரண்டு பிள்ளைகளுடன் தங்கி இருந்தார்.

Advertisement

சம்பவ தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற மகேஸ்வரி இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.   உடனே அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் மகேஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து திருவைகுண்டத்தில் வேலை பார்த்த  அவரது கணவர் அருள்லிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே ஊர் திரும்பி வெள்ளி சந்தை போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News