ஏற்காடு மலை கிராமங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டெருமைகள்

ஏற்காடு மலை கிராமங்களில் காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகிறது.

Update: 2024-02-21 11:24 GMT

காட்டெருமைகள்

சேலம் ஏற்காட்டிற்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளது. இங்குள்ள மலை பகுதியில் வானுயுர்ந்த மரங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் காபி, ஆரஞ்சு, மிளகு, அத்திபழம், ஆட்டுக்கால் கிழங்கு, மலை வாழை உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது. குறிப்பாக ஏற்காடு தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதால் இங்கு காட்டெருமைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. இந்த காட்டெருமைகள் சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து காட்டெருமை 2 பேரை தாக்கியது. தற்போது கோடைகாலத்திற்கு முன்பாகவே ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்க தொடங்கியுள்ளது. காபி தோட்டங்களில் காபி செடிகளுக்கு இடையே காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News