வனத்துறைக்கு போக்கு காட்டும் காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றியுள்ளப் பகுதிகளில் வனத்துறைக்கு போக்கு காட்டும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-06-19 12:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றியுள்ளப் பகுதிகளில் வனத்துறைக்கு போக்கு காட்டும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டுருந்த 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அருகே உள்ள கொங்கணப்பள்ளி வனபகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு வனப்பகுதியை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் இந்த காட்டு யானைகள் குழுக்களாக இருந்த நிலையில் 7 மற்றும் 3 என இரண்டு குழுக்களாக தனித்தனியாக பிரிந்து தற்போது பகுதியில் வனப்பகுதி முழுவதும் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் வனப்பகுதி ஓட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையில் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் காட்டு யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை கிராமத்தை விட்டு வெளிவரமால் வீடுகளிலியே உள்ளனர். இந்த நிலையில் இந்த காட்டு யானைகளை கடந்த ஒரு வாரமாக ஆந்திர மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் வனத்துறைக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் திறந்து சுற்றித்திரிந்து தமிழக வனப்பகுதிலியே முகாமிட்டு வருகிறது. இதனால் யானையை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குழுக்களாக அமைக்கப்பட்டு தற்போது யானைகளை பானம் மற்றும் பட்டாசு வெடிகளை வைத்து வேறு வனப்பகுதி விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 1 வருடத்திற்கு பிறகு மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் பீதி அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News