முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்.

Update: 2023-11-29 11:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது முதுமலை புலிகள் காப்பகம். இந்த முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, மான்கள், யானை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுபடி ஆண்டுதோறும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மண்டல புலிகள் கணக்கெடுக்கும் பணியானது நடைபெறும் . இந்த வருடமும் இதே போல் முதுமலை வனப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கக்கூடிய 191 இடங்களில் கண்டறியப்பட்டு 392 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 250 வன பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News