பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படுமா?- மக்கள் எதிர்பார்ப்பு

விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-10 10:00 GMT

சேதமடைந்த சாலை

விராலிமலை அருகே ராஜாளி பட்டியில் இருந்து பாட்டைப்பட்டிக்கு செல்லும் தார் சாலை சிதலமடைந்து குண்டும், குழியுமாக பச்ச காணப்படுகிறது. இப்போது மழை காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி சேரும் சக அதிகமாக மாறிவிட்டது. இதனால் இந்த சாலை பயன்படுத்தி வரும் செல்லாண்டி அம்மன் கோவில், விருத்தாப்பட்டி, பசுமை நகர், பகவான் பட்டி, உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க கோரி பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News