கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் வசதி ஏற்படுத்தப்படுமா?

காஞ்சிபுரம் அருகே கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2024-01-01 09:16 GMT

தண்ணீர் இல்லாமல் உள்ள குடிநீர் தொட்டி 

காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர் ஊராட்சி, மேட்டுகுப்பம் சாலையோரம், 2018 - 19ல் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

பணி முடிந்தும் நான்கு ஆண்டுகளுக்கு மோலகியும், கால்நடை தொட்டிக்கு என, இதுவரை, 'பைப் லைன்' அமைத்து தொட்டியில் குடிநீர் நிரப்ப குழாய் வசதி ஏற்படுத்தவில்லை.

இதனால், தொட்டி வீணாகி வருவதோடு, மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் தாகம் தீர்க்க வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைத்து, தினமும் குடிநீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்."

Tags:    

Similar News