குடியரசு தலைவர் ஆட்சி அமையுமா? விடை சொல்லும் தேர்தல்: வைகோ

குடியரசு தலைவர் ஆட்சி அமையுமா? என தேர்தல் விடை சொல்லும் தேர்தல் என வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-20 14:11 GMT
குடியரசு தலைவர் ஆட்சி அமையுமா? விடை சொல்லும் தேர்தல்-வைகோ

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய நாட்டின் வரலாற்றில் 47 ஆண்டுக்குப் பின் நாம் சந்திக்கும் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல்.

இந்த தேர்தல் பாராளுமன்ற ஜனநாயகம் நீடிக்க வேண்டுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமையுமா என்பதற்கு விடை சொல்லும் தேர்தல் ஏனென்றால் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொது சிவில் சட்டம் அமல் காஷ்மீரில் 370 வது அரசியல் சட்டம் குப்பையில் போடப்பட்டது அதோடு மட்டுமல்லாமல் சனாதன சக்திகளெல்லாம் ஒன்று சேர்ந்து அகமதாபாத்தில் இந்திய அரசியலை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.

அதில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் , இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் இவைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்வைத்து பேசியுள்ளனர் . எனவே தான் மோடி அவர்கள் ஆட்சி முறையில் பல மடைமாற்றங்களை கொண்டு வருகிறார்.

பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தி விட்டால் அவரே குடியரசுத் தலைவராகவும் முயற்சிக்கிறார் ஆகவே ஜாதி மதங்களால் நாட்டை பிளவு படுத்துவதே குறியாக உள்ளனர் 130 கோடி மக்களுக்கு தலைவரான பிரதமர் ஒரு பண்போடு பேச வேண்டும் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்.

Tags:    

Similar News