நடத்தை விதிமுறைகள் வாபஸ்; நகர் மன்ற தலைவர் அறை திறப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் அறை திறக்கப்பட்டு தனது அன்றாட பணிகளை ஆரம்பித்தார்.

Update: 2024-06-08 08:03 GMT
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. நாமக்கல் நகரில் வார்டுதோறும் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக்கொடிக்கம்பங்கள், தொழிற்சங்கங்களின் கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் துணி மற்றும் சாக்குகளால் மூடி, கட்டி வைக்கப்பட்டிருந்தன அவை அப்புறப்படுத்தப்பட்டன. நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி அறை திறக்கப்பட்டு நேற்று முதல் தனது அன்றாட பணிகளை நகராட்சி அலுவலர்கள் மத்தியில் ஆலோசித்து தனது கோப்புகளில் கையெழுத்து இட்டு பணிகளை தொடர்ந்தார்.
Tags:    

Similar News