மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது
மாரண்டஹள்ளி அருகே பெல்லுஅள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் கைது.
Update: 2024-04-02 02:40 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அருகே அமைந்துள்ள பெல்லுஅள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம், துணை வட்டாட்சியர் எழில்மொழி ஆகியோர் பெல்லுஅள்ளி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கமலா என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது அவரிடம் இருந்து 7,590 ரூபாய் மதிப்புள்ள 50 மதுபாட்டில்களையும் 3,440 ரூபாயும் பறிமுதல் செய்து மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாரண்ட அள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.