கஞ்சா விற்ற பெண் கைது 

ஆவடி அருகே கஞ்சா விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-20 16:49 GMT

கஞ்சா விற்பனை செய்தவர் 

ஆவடி அடுத்த அண்ணனுாரில், கஞ்சா விற்பனை நடப்பதாக அம்பத்துார் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த மரிசா நாகம்மா, 44, என தெரிந்தது.

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வரும் இவர், அம்பத்துார் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News