காதல் கணவன் கொடுமையால் 4வயது குழந்தையின் தாய் தற்கொலை முயற்சி
மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துக்குடி பகுதியில் கணவனின் தொல்லையால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
தற்கொலை
மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ் மகள் பிரியங்கா(26) இரும் பார்த்தசாரதி என்பவரும் நீண்டநாட்களாக காதலித்துவந்தனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர், இவர்களுக்கு 4 வயதில் சுஷ்மிதா என்ற பெண்குழந்தை உள்ளது. பார்த்தசாரதி அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரியங்காவை அடித்து துன்புறத்துவதுவாடிக்கை, பொறுத்துப் பார்த்த பிரியாங்கா விவாகரத்து கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார், வழக்கு நடைபெற்றுவருகிறது.
பிரியங்கா தன்தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். இதற்கிடையே சம்வ தினத்தன்று நிறைந்தபோதையில் இருந்த பார்த்தசாரதி பிரியங்கா வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளார், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா விஷம்குடித்து மயங்கிவிழுந்தார், அவரை உடனடியாக மயிலாடுதுறை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்,
சிகிச்சைபெற்றுவரும் அவர் அளித்த புகாரின்பேரில், பெண்ணை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பார்த்தசாரதியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.