விஷம் குடித்து பெண் தற்கொலை

கரூரில் அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலி தந்த விரக்தியில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2024-01-24 10:45 GMT

தற்கொலை 

 கரூர் சின்னான்டாங் கோயில் வாட்டர் டேங்க் அருகே வசித்து வந்தவர் நாகராஜ் . இவரது மனைவி கார்த்திகா  24. கார்த்திகா நாகராஜ் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து வருடமாக, அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமடையவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த கார்த்திகா, ஜனவரி 21ஆம் தேதி இரவு 7 மணி அளவில், அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அறிந்த அவரது தாயார் ராஜேஸ்வரி, உடனடியாக கார்த்திகாவை மீட்டு, கரூரில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சைகளில் இருந்து வந்த கார்த்திகா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கார்த்திகாவின் தாயார் ராஜேஸ்வரி, இந்த சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கார்த்திகாவின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

Similar News