பெண் விஷம் குடித்து தற்கொலை

திருவட்டார் அருகே கணவன்,குழந்தைகள் பிரிந்து சென்ற மன வேதனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-13 03:34 GMT

காவல் நிலையம் 

திருவட்டார் அருகே பறையன்விளை, மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருக்கு ஷயினி என்ற மகள் உள்ளார். இவருக்கும், அர்ச்சுனன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 12 வயதில் ஒரு பெண்ணும், 10 வயதில் ஒரு ஆணும் உள்ளனர். கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் 2 பேரும் தந்தை அர்ச்சுனனுடன் வசித்து வருகின்றனர்

. ஷயினி தன் தாயாருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஷயினிக்கு உடல் நிலைசரியில்லாமல் அவதிபட்டு வந்தார்.இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கணவர் மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்ற வருத்தத்தினாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.

வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது ஷயினி இறந்தது தெரியவந்தது. இவரது தாய் மேரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News