அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை
கெங்கவல்லி அருகே அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை.
Update: 2024-03-19 06:24 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி மேலவீதியை சேர்ந்த வரதராஜ் மனைவி அகிலா (வயது 32). இவர்கள் இரு வருக்கும் குடும்ப பிரச்சினை இருந்தது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அகிலா அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் இதை பார்த்து அவரை உடனே ஆத்தூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அகிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.