சங்கரன்கோவிலில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-29 02:23 GMT
தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா மகள் ராமலட்சுமி (37). ராமலட்சுமிக்கு மனநலன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் ஆத்தடி விநாயகர் கோவில் அருகே உள்ள கிணற்றில் ராமலெட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Tags:    

Similar News