நிதி நிறுவன தொல்லையால் பெண் தற்கொலை !
நிதி நிறுவனங்களில் கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-04-13 07:18 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் கார்த்திகா, 21, ராகுல், 27. ராகுல் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கார்த்திகா 3 வயதான குழந்தை தர்ஷினியுடன் வீட்டில் இருந்தார். இவரது தாயார் ராணி, 40. இவர் தன் கணவர் இறந்ததால் தம்மண்ணன் வீதியில் உள்ள இளைய மகள் வீட்டில் இருந்து வந்தார். சில நாட்கள் முன்பு கணவன், மனைவி இருவரும், தாயார் இருந்த வீட்டிற்கு குழந்தையுடன் வந்து, நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதால், செலுத்த முடியாத நிலை. அதனால் அவர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று கார்த்திகா கூறினார். ஒரு மாதம் தங்கி விட்டு, ராகுலின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர். அங்கும் வந்து நிதி நிறுவனத்தார் தொந்தரவு கொடுப்பதாக கார்த்திகா, ராணி வசம் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை 03:30 மணியளவில் கார்த்திகா, வீட்டின் பூஜை அறையில் உள்ள விட்டத்தில் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டு இருப்பதாக ராணி வசம், ராகுல் கூற, ராணி மற்றும் உறவினர்கள் நேரில் சென்று, கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது, அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து ராணி குமாரபாளையம் போலீசில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதன் அடுத்த கட்டமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரது விசாரணைக்கு பிறகு கார்த்திகாவின் பிரேதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து போலீசார் 4 மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனமும் மகளிர் குழுவினர்களும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.