வயிற்று வலியால் பெண் தற்கொலை

கள்ளகுறிச்சி மாவட்டம், அத்தண்டமருதுார் பகுதியில் வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-07 07:06 GMT
பெண் பலி
திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி சுமதி, 45; கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News