குடும்ப தகராறில் தூக்கிட்டு பெண்மணி தற்கொலை
அரியலூர் மாவட்டம், பள்ளகாவேரி பகுதியில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-24 07:15 GMT
தற்கொலை
அரியலூர் மாவட்டம் , பள்ளகாவேரி கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி சசிகலா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 13 ஆண்டுகள் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவிற்கும், சசிகலாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவதன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், இதுகுறித்து சசிகலாவின் தாயார் எழிலரசி என்பவர் கயர்லாபாத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.