குடும்ப பிரச்சனையால் இளம்பெண் செய்த விபரீத செயல்
பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் பகுதியில் குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி கீர்த்தனா - 29, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார், இந்நிலையில், வினோத் கடந்த 1 1/2 வருடமாக, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் தெற்கு தெரு பகுதியில் உள்ள, சிவகாமி காம்ப்ளக்ஸ் -ல் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், வினோத், கீர்த்தனா தம்பதிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த கீர்த்தனா, பிப்ரவரி 9ம் தேதி பகல் 2 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் உள்ளே உள்ள கொக்கியில் சேலையில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த கீர்த்தனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்து. இதனைத் தொடர்ந்து கீர்த்தனா உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.