குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

திருச்சியில் குடும்பத்தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-27 02:11 GMT

தற்கொலை

திருச்சி பாலக்கரை கூனிபஜாா் பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டா் காா்த்திக். இவரது மனைவி வெண்ணிலா (35). இவா்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. வெண்ணிலா திருச்சி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளா். இவா் தனது குழந்தைகள் மற்றும் பீமநகா் பகுதியைச் சோ்ந்த சக ஊழியருடன் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்குச் சென்றாராம். இதை கணவா் கண்டித்ததால் விரக்தியடைந்த வெண்ணிலா திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News