குடும்ப தகராறு – இளம்பெண் தற்கொலை
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பகுதியில் குடும்ப தகராற்றால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-28 14:06 GMT
மரணம்
சேலம், வேம்படிதாளம் பழைய தபால் அலுவலக பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. கூலி தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (27) , இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த கஸ்தூரி நேற்று முன்தினம் உயர் ரத்த அழுத்தத்திற்கு சாப்பிடும் 28 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் r அவர் நேற்று பரிrதாபமாக இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.