காளவாசல் பைபாஸில் அரசு பேருந்து மோதி பெண் உடல் நசுங்கி பலி

காளவாசல் பைபாஸில் அரசு பேருந்து மோதி பெண் உடல் நசுங்கி பலியானர்.;

Update: 2023-12-16 09:41 GMT

சாலை விபத்து

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கலா (வயது-46).ராஜா காளவாசல் பைபாஸ் சாலையில் டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராஜா அவரது மனைவி கலா, இரண்டரை வயது பேரன் ஆகிய மூவரும் பழங்காநத்தம் பகுதியில் இருந்து காளவாசல் பைபாஸில் சொக்கலிங்க நகர் பஸ் ஸ்டாப்புக்கு இருசக்கர வாகனத்தில் 69 வரும் போது, திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பைபாஸ் சாலையில் இடதுபுறம் சென்று கொண்டிருந்த ராஜாவின் பைக் மீது பேருந்து மோதியதில் ராஜாவும் அவரது பேரனும் இடது புறம் நோக்கி விழுந்தனர்.

Advertisement

ராஜாவின் மனைவி கலா பேருந்து சக்கரத்தின் கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் கலாவின் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி கலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து வந்த போலீசார் அரசு பேருந்தை ஒட்டி வந்த ஓட்டுநர் சக்திவேலிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த கலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காளவாசல் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்ற போது அரசு பேருந்து மோதி பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News