நகை பறித்த போது கொள்ளையன் தள்ளிவிட்டதில் பெண் பலி

சேலம் அருகே நகை பறித்த போது கொள்ளையன் தள்ளிவிட்டதில் பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-26 16:05 GMT

 பலி 

சேலம் ஜாகீர் காமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்ன தங்கம் (வயது 65). இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நங்கவள்ளி செம்பட்டியூர் பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மகன் அரவிந்த் (23) என்பவர் சின்னதங்கத்திடம் இருந்த 8 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த சின்னதங்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையன் அரவிந்த்தை கைது செய்தனர்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னதங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News