பஸ் ஸ்டாப்பில் பெண் வெட்டிக் கொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
தூத்துக்குடி அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-15 01:59 GMT
பஸ் ஸ்டாப்
இந்நிலையில், இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்டாப்பில் பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் பஸ்டாப்பில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.