வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை !
வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை. கணவன் புகார். காவல்துறை வழக்கு பதிவு.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 11:52 GMT
வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை. கணவன் புகார்.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, மோளப்பட்டி அருகே உள்ள சீதப்பட்டி பழைய காலனியை சேர்ந்தவர் குமாரசாமி மனைவி செல்வராணி வயது 48. செல்வராணிக்கு கடந்த இரண்டு வாரமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், விரத்தியில் மார்ச் 24ஆம் தேதி அன்று எறும்பு பவுடரை உட்கொண்டுள்ளார். அப்போது அவரைக் காப்பாற்றுவதற்காக புளியஞ்சாற்றை உப்பு உடன் கலந்து கொடுத்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். மீண்டும் மார்ச் 31ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்படவே, விரக்தியடைந்த செல்வராணி அவரது வீட்டில் மதியம் ஒரு மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக செல்வராணியின் கணவர் குமாரசாமி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த செல்வராணி உடலை உடற்கூறு ஆய்வுக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.