பல்லடத்தில் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு அடி உதை: போலீசார் விசாரணை

பல்லடத்தில் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு அடி உதை விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-17 14:31 GMT
பல்லடத்தில் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு அடி உதை: போலீசார் விசாரணை

கோப்பு படம் 

  • whatsapp icon

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு அடி உதை போலீசார் விசாரணை! பல்லடம் மங்கலம் ரோடு சங்கரலிங்கனார் வீதியை சேர்ந்தவர் ராபி என்கிற முன்னா (வயது 51) இவரது கணவர் கடந்த சில வருடங்கள் முன்பு இறந்ததால் வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வருகிறார்.

இந்த நிலையில் குடும்ப செலவிற்காக அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் வட்டி குறைவாக கூறியவர்கள் பின்பு அதிக வட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரந்தோறும் பணம் செலுத்தி வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த வாரம் பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

வட்டிக்கு பணம் கொடுத்த அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து பணம் கேட்டு முன்னாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக வட்டி கேட்டு பெண் தாக்கப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News